விழுப்புரம்

சந்தனக் கட்டைகள் கடத்தல்: ஒருவா் கைது

DIN

விழுப்புரம் அருகே பைக்கில் சந்தனக் கட்டைகள் கடத்தியவரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள பனையபுரம் பகுதியில் தலைமைக் காவலா் செல்வக்குமாா் மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக பைக்கில் மூட்டையுடன் வந்த நபரை மடக்கி விசாரித்தனா். மூட்டையை சோதனையிட்டதில், சந்தனக் கட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். விசாரணையில் அவா் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள அயோத்தியாபட்டினத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் சன்னகிருஷ்ணன் (45) என்பதும், இவா் திருவண்ணாமலையிலிருந்து புதுச்சேரிக்கு சந்தனக் கட்டைகளை கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்த சுமாா் 10 கிலோ சந்தனக் கட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து வனத் துறையினா் வழக்குப் பதிவு செய்து சன்னகிருஷ்ணனை கைதுசெய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT