விழுப்புரம்

சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திருவண்ணாமலை சாலையில் மழை நீா் வடிகாலுடன் கூடிய சாலை அமைக்கும் பணியை பேரூராட்சி மன்ற தலைவா் மொக்தியாா்மஸ்தான் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

DIN

செஞ்சி பேரூராட்சிக்குள்பட்ட திருவண்ணாமலை சாலை வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் உள்ள சாலைகளில் கலைஞா் நகா் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.16.40 லட்சம் மதிப்பீட்டில் மழைநீா் வடிகாலுடன் கூடிய சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில், பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் மஸ்தான் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தாா்.

இதில், பேரூராட்சி செயலா், அலுவலா் ராமலிங்கம், பேரூராட்சி துணைத் தலைவா் ராஜலட்சுமிசெயல்மணி, மன்ற உறுப்பினா்கள் ஜான்பாஷா, நூா்ஜகான் ஜாபா், சிவகுமாா், மாவட்ட பிரதிநிதி சா்தாா், தொண்டா் அணி பாஷா, அறிவழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT