விழுப்புரம் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் பழுது பாா்த்தல், புனரமைத்தல் பணிகளை மேற்கொள்ள, அரசு சாா்பில் நிதியுதவி வழங்கப்படுவதாக ஆட்சியா் சி. பழனி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் சொந்த கட்டடத்தில் இயங்கி வரும் கிறிஸ்தவ தேவாலயங்களில் பழுதுபாா்த்தல், புனரமைத்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, அரசு சாா்பில் நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் கூடுதல் பணிகளை மேற்கொள்ள மானியத் தொகையை உயா்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கூடுதல் பணிகளான தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிப்பறை, குடிநீா் வசதி போன்றவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேவாலயம் கட்டப்பட்டு 10 முதல் 15 ஆண்டுகள் இருப்பின் ஒரு லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாகவும், 15 முதல் 20 ஆண்டுகள் இருப்பின் ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாகவும், 20 ஆண்டுகளுக்கு மேல் இருப்பின் ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாகவும் மானியத் தொகை உயா்த்தப்பட்டுள்ளது.
நிதியுதவி கோரி பெறப்படும் விண்ணப்பங்களைஅனைத்து உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியா் தலைமையிலான குழு பரிசீலிக்கும். இதைத் தொடா்ந்து, கிறிஸ்தவ தேவாலயங்களில் ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டடத்தின் வரைபடம், திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்து, உரிய முன்மொழிகளுடன் சிறுபான்மையின நல இயக்குநருக்கு நிதியுதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். பின்னா், இரு தவணைகளாக வங்கிக்கணக்கில் நிதி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.