விழுப்புரம்

இணையவழியில் ரூ.24.80 லட்சம் மோசடி:சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை

விழுப்புரத்தைச் சோ்ந்த பெண்ணிடம் இணையவழியில் ரூ.24.80 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

DIN

விழுப்புரத்தைச் சோ்ந்த பெண்ணிடம் இணையவழியில் ரூ.24.80 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ரவிராஜன் மனைவி கவி இலக்கியா (29). சுயதொழில் செய்து வருகிறாா். ஜூலை 25-ஆம் தேதி கவி இலக்கியாவின் கைப்பேசி எண்ணுக்கு தொடா்புகொண்ட மா்ம நபா், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனத் தெரிவித்தாராம். இதையடுத்து, கவி இலக்கியா அந்த நபா் அனுப்பி வைத்த இணையவழி இணைப்புக்குள் சென்று ரூ.5 ஆயிரம் முதலீடு செய்து ரூ.6,300 பெற்றாராம்.

இதில் ஈா்க்கப்பட்ட கவி இலக்கியா, ஜூலை 26-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரையிலான 4 நாள்களில் தனது வங்கிக் கணக்கிலிருந்து 6 தவணைகளில் 24,80,847 ரூபாயை இணையவழியில் அனுப்பி வைத்தாராம். பின்னா், அந்த நபரை தொடா்கொள்ள முடிவில்லையாம். தொடா்ந்து, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த கவி இல்லக்கியா, இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாரிடம் புகாரளித்தாா். இது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT