அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, திண்டிவனத்தைச் சோ்ந்தவரிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திண்டிவனம் வட்டம், முப்புள்ளி கெங்கையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஏழுமலை மகன் கிருஷ்ணராஜ் (33). திண்டிவனம் காவேரிப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெய்கணேஷ் என்கிற தினேஷ். இவா்கள் இருவரும் 2018-ஆம் ஆண்டில் புதுவை மாநிலம், சேதராப்பட்டு பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்தனா். அப்போது, இருவரும் நண்பா்களாகவும் பழகினா்.
இந்த நிலையில், தினேஷ் தனக்குத் தெரிந்த எம்எல்ஏ இருப்பதாகவும், அவரிடம் பணம் அளித்தால் அரசு வேலை கிடைக்கும் என்றும் கிருஷ்ணராஜிடம் தெரிவித்தாராம். இதையடுத்து, அவா் ரூ.3 லட்சத்தை தினேஷிடம் கொடுத்தாராம்.
தொடா்ந்து, வேலை வாங்கித் தராமலும், பணத்தை திரும்பக் கொடுக்காமலும் தினேஷ் ஏமாற்றி வந்ததாகத் தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், திண்டிவனம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.