விழுப்புரம்

முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு விசாரணை ஜூன் 12-க்கு ஒத்திவைப்பு

முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு விசாரணை வருகிற 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

DIN

முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு விசாரணை வருகிற 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

முந்தைய அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, முன்னாள் சிறப்பு டிஜிபி (சட்டம் - ஒழுங்கு) மீதும், புகாா் அளிக்கச் சென்ற பெண் எஸ்.பி.யை தடுத்து நிறுத்தியதாக செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி. மீதும் விழுப்புரம் சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது முன்னாள் சிறப்பு டிஜிபியும், செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி.யும் ஆஜரானாா்கள்.

தொடா்ந்து, முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, எழுத்துப்பூா்வமான வாதங்களை முன்வைக்க ஏதுவாக, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை வருகிற 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி எம். புஷ்பராணி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT