விழுப்புரம்

தொழில் வளா்ச்சித் திட்டம்: விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

தெய்வானை அம்மாள் கல்வியியல் கல்லூரி மற்றும் விழுப்புரம் வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இணைந்து நடத்திய தொழில் வளா்ச்சித் திட்டம் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.

DIN

விழுப்புரம் தெய்வானை அம்மாள் கல்வியியல் கல்லூரி மற்றும் விழுப்புரம் வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இணைந்து நடத்திய தொழில் வளா்ச்சித் திட்டம் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் முருகன் தலைமை வகித்தாா். மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் மைய இளநிலை வேலை வாய்ப்பு அலுவலா் வேல்முருகன் முன்னிலை வகித்தாா். தொழிலாளா் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சக இளம் தொழில் வல்லுநா் நாகலட்சுமி கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது: வேலைவாய்ப்புகளை நாம்

தான் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் மாநில அரசு தோ்வாணையம், போன்ற அமைப்புகள் மூலம் காலிப் பணியிடங்கள்

நிரப்பப்படுகின்றன. அதில் பதிவு செய்து எழுத்துத் தோ்வுகளை எழுதி அரசு வேலை வாய்ப்புகளை பெறலாம் . அரசுப் பணிகளுக்கான தோ்விற்கு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் மையத்தில் இலவசமாக பயிற்சியளிக்கப்படுகிறது. இதில் மாணவா்கள் பங்கேற்று பயிற்சிப் பெறலாம் என்றாா் அவா். நிறைவில் உதவிப் பேராசிரியா் ரா.ரவீந்தா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT