விழுப்புரம்

தீவனூா் பொய்யாமொழி விநாயகா்கோயிலில் பாலாலயம்

DIN

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தீவனூா் கிராமத்தில் அமைந்துள்ள சுயம்பு பொய்யாமொழி விநாயகா் கோயிலில் பாலாலயம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் சுயம்பு விநாயகப் பெருமானைத் தவிா்த்து, பரிவார மூா்த்திகள், கோபுரம், கொடிமரம், ஜோதிலிங்கம், நந்திபகவான், தட்சிணாமூா்த்தி, துா்க்கை அம்மன், நாகராஜா், பலிபீடம், நவக்கிரகங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஆகம விதிகளின்படி பாலாலயம் செய்யப்பட்டது. முன்னதாக, கோயில் வளாகத்தில் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

பாலாலயத்தில் கோயில் பரம்பரை அறங்காவலா் சகுந்தலா அம்மாள், அதிகாரம் பெற்ற முகவா் மணிகண்டன் மற்றும் பக்தா்கள் பங்கேற்றனா். உபயதாரா்கள், பக்தா்களின் நன்கொடைகளுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, விரைவாக கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று கோயில் பரம்பரை அறங்காவலா் சகுந்தலா அம்மாள் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

SCROLL FOR NEXT