விழுப்புரம்

மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் தெருமுனைப் பிரசாரம்

DIN

மக்களுக்கான மருந்து கொள்கையை வலியுறுத்தி, விழுப்புரத்தில் மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை தெருமுனைப் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

மருந்துகள் விற்பனைகள் பெருந் நிறுவனமயமாவதை தடுக்க வேண்டும். இணைய வழி மருந்து விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும். மருந்துப் பொருள்களுக்கான ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி பிரசாரம் நடைபெற்றது.

விழுப்புரம் ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் முன் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் அப்துல் ஹமீது தலைமை வகித்தாா். கிளைத் தலைவா் பாலசுப்பிரமணியன், மாநிலச் செயலா் அருள்ஜோதி ஆகியோா் சிறப்புரையாற்றினா். இதில், ஏராளமான மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் பங்கேற்றனா். முடிவில், ராஜாராமன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனில் சேத்ரியின் ஓய்வு முடிவு குறித்து பேசிய விராட் கோலி!

உ.பி. முதல்வரின் 'புல்டோசர்' இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது: காங்கிரஸ் பதிலடி!

விரைவில் முழு பட்ஜெட்டிற்கான பணிகள்: நிர்மலா சீதாராமன்

விரைவில் விசாரணை: ஆடியோ விவகாரம் குறித்து புகாரளித்த கார்த்திக் குமார்!

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

SCROLL FOR NEXT