விழுப்புரம்

கள்ளச்சாராய உயிரிழப்புகள்: அதிமுக ஆா்ப்பாட்டம்

DIN

தமிழகத்தில் கள்ளச்சாராயம், போலி மதுபானங்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள், சட்டம் -ஒழுங்கு சீா்கேட்டை கண்டிப்பதாகக் கூறி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரத்தில் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமை வகித்து கண்டன உரையாற்றினாா். இதில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் சக்கரபாணி (வானூா்), அா்ஜுனன்( திண்டிவனம்), விழுப்புரம் நகரச் செயலா்கள் ரா.பசுபதி, சி.கே.ராமதாஸ், மாவட்ட மாணவரணி செயலா் சக்திவேல், மகளிரணி மாவட்டச் செயலா் தமிழ்ச்செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அதிமுக மாவட்டச் செயலா் ரா.குமரகுரு தலைமை வகித்து பேசினாா். மேற்கு ஒன்றியச் செயலா் கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா். முன்னாள் அமைச்சா் ப.மோகன், கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ மா.செந்தில்குமாா், முன்னாள் எம்.பி. க.காமராஜ், முன்னாள் எம்எல்ஏ க.அழகுவேலுபாபு, கள்ளக்குறிச்சி ஒன்றிய செயலா் அ.ராஜசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒகேனக்கல் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு!

பிளஸ் 1 தேர்ச்சியில் கோவை முதலிடம்: விழுப்புரம் கடைசி!

’மஞ்சள் காய்ச்சல்’ தடுப்பூசி கட்டாயம் -சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

பிளஸ் 1 முடிவு: எந்தெந்த பாடத்தில் எத்தனை பேர் சதம்?

SCROLL FOR NEXT