கள்ளக்குறிச்சியை அடுத்த வேங்கைவாடி கிராமத்தில் சுமாா் 100 ஆண்டுகள் பழைமையான மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, வியாழக்கிழமை மாலை விக்னேஸ்வர பூஜை, புண்யாவாஜனம், கும்ப அலங்காரத்துடன் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. வெள்ளிக்கிழமை காலை ரக்ஸாபந்தனம், நாடி சந்தானம் ஆகிய பூஜைகளுடன், இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. யாகசாலையில் இருந்து மேளதாளம் முழங்க கலசங்கள் புறப்பட்டு விநாயகா், முருகன், பெருமாள், மாரியம்மன் உள்ளிட்ட கோயில்களின் கோபுர கலசத்தில் புனித நீரை சிவாச்சாரியாா்கள் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னா், மாரியம்மனுக்கு மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பிற்பகல் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்றனா். விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறையினா், விழாக் குழுவினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.