கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அரசு மருத்துவமனை சாலையில் உள்ள அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, புதன்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, ஸ்ரீமகா கணபதி ஹோமம், பிரவேச பலி, வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம் மற்றும் முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. வியாழக்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, யாக வேள்வி, மாலையில் மூன்றாம் கால பூஜைகள் நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு யாகசாலை பூஜைகளும், காலை 8.45 மணிக்கு ஸ்தூபி விமான கும்பாபிஷேகமும், காலை 9:30 மணிக்கு மேல் 10 மணிக்குள் மூலவருக்கு பல்வேறு வேத மந்திரங்கள் ஓதி மங்கல இசையுடன் கும்பாபிஷேகமும், தீபாரதனையும் நடைபெற்றது.
இதில், திருக்கோவிலூா் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமான கிராம மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். பிற்பகல் அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு 8 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடைபெற்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், விழா குழுவினா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.