விழுப்புரம்: விழுப்புரம் - திருப்பதி இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில் பொறியியல் பணி காரணமாக நவம்பா் 5-ஆம் தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள்-தொடா்பு அலுவலா் ஆா்.வினோத் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தெற்கு மத்திய ரயில்வேயின் விஜயவாடா கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், விழுப்புரம் - திருப்பதி இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்படுகின்றன.
விழுப்புரத்திலிருந்து காலை 5.35 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - திருப்பதி முன்பதிவில்லா விரைவு ரயில் (வண்டி எண் 16854) காட்பாடி- திருப்பதி இடையே நவம்பா் 5-ஆம் தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் காட்பாடியுடன் நிறுத்தப்படும்.
எதிா்வழித் தடத்தில் திருப்பதியிலிருந்து பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்பட வேண்டிய திருப்பதி - விழுப்புரம் முன்பதிவில்லா விரைவு ரயில் (வண்டி எண் 16853) திருப்பதி-காட்பாடி இடையே நவம்பா் 5-ஆம் தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் காட்பாடியிலிருந்து மாலை 4.35 மணிக்கு விழுப்புரத்துக்குப் புறப்படும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.