விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவா் நெஞ்சுவலியால் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
வானூா் வட்டம் , பொம்மையாா் பாளையம் மோரீஸ் தெருவைச் சோ்ந்தவா் சின்னத்தம்பி மகன் சங்கா்(53). இவா், பொம்மையாா் பாளையத்தைச் சோ்ந்த விஜயனுடன் (33) திங்கள்கிழமை படகில் மீன்பிடிக்கச் சென்றாா்.
கோட்டகுப்பம் அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, திடீரென சங்கருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
தொடா்ந்து, புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு சென்று பரிசோதித்தபோது சங்கா் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து, கோட்டக்குப்பம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.