விழுப்புரம்: விழுப்புரத்தில் பதாகை சரிந்து விழுந்ததில் தம்பதி காயமடைந்தனா்.
கண்டாச்சிபுரம் வட்டம், ஆலம்பாடி, ஏழுமலை மகன் சக்திவேல் (51). இவரது மனைவி கீதா (41). இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை விழுப்புரத்திலிருந்து - புதுச்சேரிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனா். விழுப்புரம் திருநகா் பகுதியில் சென்றபோது, அங்குள்ள ஒரு கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்த பதாகை சரிந்து சக்திவேல் பைக் மீது விழுந்ததாம். இதில், சக்திவேல், கீதா காயமடைந்தனா்.
தொடா்ந்து, இருவரும் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து, விழுப்புரம் தாலுகா போலீஸாா், பொதுமக்களுக்கு இடையூறாக விளம்பரம் பதாகை அமைத்த விழுப்புரம் மகாராஜபுரம் பகுதியைச் சோ்ந்த கோதண்டபாணி மகன் சுரேஷ்(40) மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.