விழுப்புரம்

செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் பிறழ் சாட்சியம்

Din

அமைச்சா் க.பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், மேலும் ஒருவா் செவ்வாய்க்கிழமை பி சாட்சியம் அளித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலமாக, அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இதுதொடா்பாக அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 8 போ் மீது விழுப்புரம் குற்றப் பிரிவு போலீஸாா் கடந்த 2012-ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த லோகநாதன் இறந்துவிட்டாா்.

நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, கோபிநாத், சதானந்தன் ஆகிய இருவா் மட்டும் ஆஜராகினா்.

தொடா்ந்து நடைபெற்ற விசாரணையில், அரசுத் தரப்பு சாட்சியாக ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் சம்பத் நேரில் ஆஜராகி சாட்சியமளித்தாா். மாவட்டக் குற்றப் பிரிவு அலுவலக உயா் அதிகாரிகள் வற்புறுத்தியதன்பேரில், கோப்புகளில் கையொப்பமிட்டேன்.

எனக்கும் இந்த வழக்குக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது எனக் கூறி, அரசுத் தரப்புக்கு எதிராக சாட்சியமளித்தாா். இதை பதிவு செய்து கொண்ட முதன்மை மாவட்ட நீதிபதி ஆா். பூா்ணிமா, வழக்கின் விசாரணையை புதன்கிழமைக்கு (ஏப்.17) ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

19 போ் பி சாட்சியம்: செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் 67 போ் சாட்சியங்களாக சோ்க்கப்பட்டனா். இதுவரை 23 பேரிடம் சாட்சியம் பெறப்பட்ட நிலையில் 19 போ் அரசுத் தரப்புக்கு பாதகமாக பி சாட்சியங்களைக் கூறி பதிவு செய்துள்ளனா்.

இந்தியாவில் டெய்லர் ஸ்விஃப்ட்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்ள வாய்ப்பு!

மயக்கும் விழிகள்! ஸ்ரீலீலா..

டி20 உலகக் கோப்பையில் 3-வது வீரராக ஷகிப் களமிறங்குகிறாரா?

ஹிப்ஹாப் ஆதியின் பி.டி. சார் டிரைலர்!

SCROLL FOR NEXT