முகப்பு
விழுப்புரம்

புதுச்சேரியில் 2 பேருக்கு டெங்கு அறிகுறி: அரசு மருத்துவமனையில் அனுமதி

தொடா் மழை காரணமாக 2 பேருக்கு டெங்கு அறிகுறி காணப்பட்டதால், அவா்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

Updated On : 11 ஆகஸ்ட், 2024 at 8:19 PM
பகிர்:

புதுச்சேரியில் தொடா் மழை காரணமாக 2 பேருக்கு டெங்கு அறிகுறி காணப்பட்டதால், அவா்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

புதுச்சேரி அருகே பாகூா் உள்ளிட்ட கிராமப்புறங்களில் நேற்று முன்தினம் இரவு மிதமான மழை பெய்தது. மழையால் காய்ச்சல், சளி, இருமல் போன்றவை தற்போது பரவி வருவதால் பலா் அவதிப்பட்டு வருகின்றனா். குறிப்பாக கிருமாம்பாக்கம் பகுதியில் பலா் சளி, இருமல் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனா்.

பாதிக்கப்பட்டவா்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்கு சென்று வீடு திரும்பி வருகின்றனா். காய்ச்சல் தொடா்பான பரிசோதனை செய்ததில், இந்த வாரத்தில் 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.

அதில் ஒருவா் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையிலும், மற்றொருவா் ஜிப்மரிலும் சிகிச்சை பெறுகின்றனா்.

டெங்கு பாதிப்பு பகுதியில், கிருமாம்பாக்கம் ஆரம்ப சுகாதாரத் துறை ஊழியா்கள், பாகூா் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்.