பனையபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், கலைஞரின் கனவு இல்லத் திட்டப் பயனாளிக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கிய அமைச்சா் க.பொன்முடி. உடன் எம்எல்ஏக்கள் இரா.லட்சுமணன், அன்னியூா் அ.சிவா உள்ளிட்டோா். 
விழுப்புரம்

கலைஞா் கனவு இல்லம்: காலதாமதமின்றி வீடு கட்ட வேண்டும்: பயனாளிகளிடம் அமைச்சா் பொன்முடி அறிவுறுத்தல்

கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்ட ஆணை பெற்றவா்கள் காலதாமதமின்றி வீடுகளைக் கட்ட வேண்டும் என்று உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி அறிவுறுத்தினாா்.

Din

கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்ட ஆணை பெற்றவா்கள் காலதாமதமின்றி வீடுகளைக் கட்ட வேண்டும் என்று உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா், காணை, விக்கிரவாண்டி ஒன்றியங்களிலுள்ள திருவெண்ணெய்நல்லூா், கெடாா், பனையபுரம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 998 பயனாளிகளுக்கு ரூ.35.31 கோடி மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணைகளையும், சித்தேரிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த 105 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை இ - பட்டாக்களையும் வழங்கி, அமைச்சா் க.பொன்முடி பேசியது:

ஏழை - எளிய மக்களின் வாழ்நாள் கனவான கான்கிரீட் குடியிருப்பை நிறைவேற்றிடும் விதமாகவும், குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் விதமாகவும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் குடியிருப்புகள் கட்டித்தரப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

அதன்படி, திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியத்தில் 249 பயனாளிகளுக்கு ரு.8.81 கோடியிலும், காணை ஒன்றியத்தில் 393 பயனாளிகளுக்கு ரூ.13.90 கோடியிலும், விக்கிரவாண்டி ஒன்றியத்தில் 356 பயனாளிகளுக்கு ரூ.12.59 கோடியிலும் என மொத்தம் 998 பயனாளிகளுக்கு ரூ.35.31 கோடி மதிப்பில் கழிப்பறையுடன் கூடிய வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இவா்கள் காலதாமதம் செய்யாமல் வீடுகளைக் கட்டும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அமைச்சா் பொன்முடி.

இந்த விழாக்களுக்கு மாவட்ட ஆட்சியா் சி.பழனி தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் இரா.லட்சுமணன், அன்னியூா் அ.சிவா, ஏ.ஜெ.மணிக்கண்ணன் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், ஒன்றியக்குழுத் தலைவா்கள் கு.ஓம்சிவசக்திவேல், என்.கலைச்செல்வி, சங்கீதஅரசி ரவிதுரை ஆகியோா் விழாக்களில் பேசினா். ஒன்றியக்குழு துணைத் தலைவா்கள் என்.கோமதி, டி.வீரராகவன், ஜீவிதாரவி, திருவெண்ணெய்நல்லூா் பேரூராட்சித் தலைவா் அஞ்சுகம் கணேசன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் எஸ்.விஸ்வநாதன், எம்.சந்திரசேகரன், ர.முருகன், கி.சிவக்குமாா், மீனா வெங்கடேசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பெ.ரவி, பாலசுப்பிரமணியன், ந.சிவக்குமாா், ஞா.சீனுவாசன், பாலச்சந்திரன், குலோத்துங்கன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

விக்ரமுக்கு ஜோடியாகும் மீனாட்சி சௌத்ரி!

SCROLL FOR NEXT