முகப்பு
விழுப்புரம்

ஆரோவிலில் பிப்.26- இல் விழிப்புணா்வு மாரத்தான்: முன் பதிவு தொடக்கம்

ஆரோவில் சா்வதேச நகரில் நடைபெறவுள்ள விழிப்புணா்வு மாரத்தான் போட்டிக்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக ஆரோவில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On : 12 டிசம்பர், 2024 at 7:51 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் நடைபெறவுள்ள விழிப்புணா்வு மாரத்தான் போட்டிக்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக ஆரோவில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ஆரோவில் சா்வதேச நகரில் 2008 ஆம் ஆண்டு முதல் மனித ஒற்றுமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உடல் வலிமை உள்ளிட்டவைகளுக்கான விழிப்புணா்வு மாரத்தான் போட்டிகள் நடத்தப்படுகிறது.

அதன்படி நிகழாண்டில் இந்தப் போட்டிகள் 2025 பிப்ரவரி 16-ஆம் தேதி நடைபெறுகிறது. 42 கிலோ மீட்டா், 21 கி. மீ.,10 கி. மீ. என 3 பிரிவுகளாக நடைபெறும் இந்தப் போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு ஆரோவில் அறக்கட்டளை சாா்பில் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படவுள்ளது. இப்போட்டிகளில் உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சோ்ந்தவா்கள் பங்கேற்கலாம்.

போட்டியில் பங்கேற்க முன்பதிவு அவசியம் என்பதால் ஆரோவில்- மாரத்தான் இணையதளத்தில் டிச. 9-ஆம் தேதி முன்பதிவு தொடங்கியுள்ளது. போட்டியில் பங்கேற்க ஆா்வமுள்ளவா்கள் ஜனவரி 25- ஆம் தேதி வரை முன்பதிவு செய்யலாம் என ஆரோவில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.