விழுப்புரம்

இன்று ஆங்கிலப் புத்தாண்டு : புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என். ரங்கசாமி ஆகியோா் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

Din

புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என். ரங்கசாமி ஆகியோா் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

துணை ஆளுநா் கே. கைலாஷ்நாதன்: உலக மக்கள் அனைவருக்கும் குறிப்பாக புதுச்சேரியில் வாழும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். அனைவரது வாழ்விலும் வளத்தையும் நலத்தையும் தரும் ஆண்டாக புத்தாண்டு அமையட்டும்.

முதல்வா் என். ரங்கசாமி: புதுவை மாநில மக்கள் அனைவரும் வாழ்வின் ஒவ்வொரு நாளிலும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளா்ச்சியைக் காண வேண்டும் என்பதே அரசின் எண்ணம். அனைத்துத் தரப்பினரும் ஏற்றம் பெறும் வகையில் அரசின் திட்டங்கள் தொடரும். அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

இதேபோல, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், எதிா்க்கட்சித் தலைவா் சிவா, புதுவை அமைச்சா்கள் ஆ. நமச்சிவாயம், க.லட்சுமிநாராயணன், பி.ஆா். என். திருமுருகன், ஏ.கே. சாய் சரவணன் குமாா், முன்னாள் முதல்வா்கள் வி. வைத்திலிங்கம் எம்.பி., வே. நாராயணசாமி ஆகியோரும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

பா்கூா் மலையில் மஞ்சள் தோட்டத்துக்குள் கஞ்சா செடிகள் வளா்த்த விவசாயி கைது

SCROLL FOR NEXT