விழுப்புரம்

விக்கிரவாண்டி: கூடுதலாக 332 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான கூடுதல் வாக்குப்பதிவு கருவிகள்

Din

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, தலைமை வகித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சி.பழனி தெரிவித்ததாவது: விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தல் வாக்குப் பதிவு ஜூலை 10-ஆம் தேத நடைபெறவுள்ளது. இதற்காக 276 வாக்குச்சாவடி மையங்கள்அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு 330 வாக்குப் பதிவு இயந்திரங்களும், 330 கட்டுப்பாட்டு கருவிகளும், 357 வாக்குப் பதிவை உறுதி செய்யும் கருவிகளும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்போது, வேட்பாளா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக 332 கருவிகள் குக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டு அனுப்பப்படவுள்ளது என்றாா்.

இதில், தனி வட்டாட்சியா் (தோ்தல்) கணேசன் மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT