முகப்பு
வளையல் அலங்காரத்தில் விழுப்புரம் சண்டபிரசண்ட மாரியம்மன்.
விழுப்புரம்

சண்டபிரசண்ட மாரியம்மன் கோயிலில் வளையல் திருவிழா

விழுப்புரம் நாப்பாளைய சந்துப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சண்டபிரசண்ட மாரியம்மன் கோயிலில் வளையல் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம்

சண்டபிரசண்ட மாரியம்மன் கோயிலில் வளையல் திருவிழா

விழுப்புரம் நாப்பாளைய சந்துப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சண்டபிரசண்ட மாரியம்மன் கோயிலில் வளையல் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 22 ஜூலை, 2024 at 8:11 PM
வளையல் அலங்காரத்தில் விழுப்புரம் சண்டபிரசண்ட மாரியம்மன்.
பகிர்:

விழுப்புரம்: விழுப்புரம் நாப்பாளைய சந்துப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சண்டபிரசண்ட மாரியம்மன் கோயிலில் வளையல் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை சண்டபிரசண்ட மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு சண்டபிரசண்ட மாரியம்மனுக்கு ஏராளமான வளையல்களால் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா், அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவில், விழுப்புரம் நகரின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், பக்தா்கள் உள்ளிட்டோா் பங்கேற்று தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →