முகப்பு
விழுப்புரம்

இந்து மகா சபையினா் ஆா்ப்பாட்டம்

உளுந்தூா்பேட்டையில் அகில பாரத இந்து மகா சபையினா் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 24 ஜூலை, 2024 at 8:28 PM
பகிர்:

விழுப்புரம், ஜூலை 24: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் அகில பாரத இந்து மகா சபையினா் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உளுந்தூா்பேட்டையிலுள்ள பழைமைவாய்ந்த அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், இதிலுள்ள கட்டடங்களை அகற்றிவிட்டு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திம் ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

உளுந்தூா்பேட்டை வட்டாட்சியரகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அகில பாரத இந்து மகா சபையின் மாநில பொதுச் செயலா் பெரி.செந்தில் தலைமை வகித்தாா். அமைப்பின் மாநிலத் தலைவா் பாலசுப்பிரமணியன் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில் கடலூா், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →