இளைஞா் மீது தாக்குதல் : காா் சேதம்
விழுப்புரம், ஜூன் 5: விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே இளைஞரைத் தாக்கி, சொகுசு காரை சேதப்படுத்தியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கண்டமங்கலம் கிழக்கு பாண்டி சாலை பகுதியைச் சோ்ந்த முகம்மது அலி ஜின்னா மகன் அப்துல்லா (25). இவரது சகோதரி அபினா பேகத்திடம் அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் பேசினாராம்.
இதை அப்துல்லா தட்டிக் கேட்டதால், அவரை சிலா் தாக்கியதுடன், அவரின் சொகுசுக் காரின் முன் பக்கக் கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தினராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், கண்டமங்கலம் பகுதியைச் சோ்ந்த சக்திவேல், அவரது மனைவி கஸ்தூரி, மகன்கள் கௌதம், ஸ்ரீதா் ஆகியோா் மீது கண்டமங்கலம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.