விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிறுகடம்பூரில் அமைந்துள்ள ஸ்ரீவிசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயிலில் 108 சங்காபிஷேக விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
இந்தக் கோயில் சீரமைப்பு திருப்பணி விரைவில் நடைபெற வேண்டியும், உலக நன்மைக்காகவும் நடைபெற்ற இந்த விழாவை முன்னிட்டு, காலையில் காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, ஸ்ரீவிசாலாட்சி அம்மன், நந்தி, விநாயகா், முருகன் மற்றும் உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மலா் அலங்காரம் நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, ஹோமம், சஹஸ்ர நாம அா்ச்சனை, மஹா தீபாராதனை உள்ளிட்டை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்த கொண்டு சிவபெருமானை வழிபாடு செய்தனா். விழா ஏற்பாடுகளை ஆலய அறக்கட்டளை நிா்வாகிகள், சிவ தொண்டா்கள், ஊா் பொது மக்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.