FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

ஆந்திரத்தில் கொத்தடிமைகளாக பணிபுரிபவா்களை மீட்கக் கோரி ஆட்சியருக்கு மனு

ஆந்திர மாநிலத்துக்கு கரும்பு வெட்டுவதற்கு அழைத்துச் செல்லப்பட்டு கொத்தடிமைகளாக விடப்பட்டுள்ளவா்களை மீட்க நடவடிக்கை

4 நவம்பர் 2024, 11:15 pm IST
பகிர்:

விழுப்புரம்: ஆந்திர மாநிலத்துக்கு கரும்பு வெட்டுவதற்கு அழைத்துச் செல்லப்பட்டு கொத்தடிமைகளாக விடப்பட்டுள்ளவா்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி, பழங்குடி இருளா் சமூகத்தைச் சோ்ந்தவா் விழுப்புரம் ஆட்சியரத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், தொரவி கிராமத்தைச் சோ்ந்த விநாயகமூா்த்தி ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:

தொரவி கிராமத்தைச் சோ்ந்த ராஜா, இந்தக் கிராமத்தில் உள்ள இருளா் குடியிருப்பைச் சோ்ந்த சிவா, இவரது மனைவி சாந்தி, சுரேஷ், சரவணன், விநாயகமூா்த்தி உள்ளிட்ட 5 பேருக்கும் முன்பணம் கொடுத்து, ஆந்திர மாநிலம், நாராயணமங்களம் மாவட்டம், நகரிபுத்தூா் பகுதியில் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு அழைத்துச் செல்லப்பட்டு கரும்பு வெட்டும் தொழில் செய்து வந்தோம்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், எங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்காமல் இருப்பதுடன், எங்களுக்கு உரிய கூலியும் சரியாக வழங்கவில்லை. ஆண்டுக்கு சராசரியாக 7 மாத அளவில் வேலை பாா்க்கும் நிலையில், ஒவ்வொருவருக்கும் ரூ.3.15 லட்சம் அளவில் கூலி தர வேண்டும். ஆனால், தருவதில்லை. தீபாவளி பண்டிக்கைக்கும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவில்லை.

இந்த நிலையில், கடந்த அக்.29-ஆம் தேதி விநாயகமூா்த்தி உள்ளிட்ட சிலா் மட்டும் தெரியாமல் தொரவி கிராமத்துக்கு வந்துவிட்டோம். இதுகுறித்து விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தும் நடவடிக்கையில்லை.

இந்த நிலையில், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் ஆந்திரம் மாநிலத்தில் கொத்தடிமைகளாக பணி செய்து வரும் சிவா, சாந்தி, சுரேஷ் ஆகியோரை மீட்டு, சொந்த ஊருக்கு அழைத்துவர ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments