முகப்பு
தமிழ்நாடு

சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!

மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடல் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. நாளை (ஜூன் 11) அரசு மரியாதையுடன் நல்லடக்கம்.

Updated On : 10 ஜூன் 2026, 10:29 pm IST
ஆம்புலன்ஸ் வாகனத்தில் சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்! - எக்ஸ்
பகிர்:

மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடல் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.

தேனி, வத்தலகுண்டு அருகே காட்ரோடு பகுதியில் உள்ள தோட்டத்தில் நாளை (ஜூன் 11) பிற்பகல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

சென்னை நீலாங்கரையில் பாரதிராஜாவின் உடல் பிரபலங்கள் மற்றும் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வந்த பாரதிராஜா, சமீபகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி இயக்குநர் பாரதிராஜா சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இன்று (ஜூன் 10) அதிகாலை காலமானார்.

திரையுலகப் பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் ரசிகர்களும் பாரதிராஜாவின் உடலுக்கு காலை முதலே அஞ்சலி செலுத்தி வந்தனர்.

இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் இருந்து பாரதிராஜாவின் உடல் அவரின் சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.

பாரதிராஜாவின் உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று முதலவர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ள நிலையில், நாளை அவரின் சொந்த ஊரில் பாரதிராஜா உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

summary

Bharathiraja's mortal remains being taken to his hometown

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.