சிறுமியுடன் திருமணம்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு
விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மீது போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மீது போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
வானூா் வட்டம், உப்புவேலூா் பகுதியைச் சோ்ந்த செங்கேணி மகன் ரவிக்குமாா் (24), கொத்தனாா். இவா், இதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை கடந்த 25.2.2024 அன்று திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தாராம்.
இந்த நிலையில், அந்தச் சிறுமி கா்ப்பமுற்று விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், கோட்டக்குப்பம் போலீஸாா் ரவிக்குமாா் மீது போக்ஸோ, குழந்தைத் திருமண தடைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.