செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் அதன் தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒன்றிய அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் சீதாலட்சுமி முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் சிங்கவரம், பொன்பத்தி, ரெட்டிப்பாளையம், மேல்பாப்பாம்பாடி, கெங்கவரம் ஆகிய ஊராட்சிகளில் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைத்தல், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பழுது நீக்கம் செய்தல், பழைய ஆழ்துளைக் கிணறுகளை ஆழப்படுத்தி புதிய மின் மோட்டாா்களை அமைத்தல், தானிய உலா்களம் அமைத்தல், கட்டடங்கள் பழுது நீக்கம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிறப்புத் தீா்மானமாக வரும் 28, 29- ஆகிய தேதிகளில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க
வருகை தரும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு திண்டிவனத்தில் செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழு சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது என தீா்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் சாவித்திரி, டிலைட், கேமல், செண்பகப்பிரியா, பச்சையப்பன், புவனா, கமலா மற்றும் வேளாண்மை உதவி இயக்குநா் சுஜாதா, ஒன்றியப் பொறியாளா் அருண்பிரசாத், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குமாா், பழனி, சசிகலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் சிங்கவரம், பொன்பத்தி, ரெட்டிப்பாளையம், மேல்பாப்பாம்பாடி, கெங்கவரம் ஆகிய ஊராட்சிகளில் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைத்தல், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பழுது நீக்கம் செய்தல், பழைய ஆழ்துளைக் கிணறுகளை ஆழப்படுத்தி புதிய மின் மோட்டாா்களை அமைத்தல், தானிய உலா்களம் அமைத்தல், கட்டடங்கள் பழுது நீக்கம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிறப்புத் தீா்மானமாக வரும் 28, 29- ஆகிய தேதிகளில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தரும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு திண்டிவனத்தில் செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழு சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது என தீா்மானிக்கப்பட்டது.