முகப்பு
விழுப்புரம்

கடை,காா் மீது மோதிய லாரி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் சாலையோரம் இருந்த கடை, காா் மீது வியாழக்கிழமை காலை லாரி மோதியது. இந்த விபத்தில் சாலையோரம் இருந்த மரம் வேரோடு சாய்ந்தது.

Updated On : 4 அக்டோபர், 2024 at 12:24 AM
வேறோடு சாய்ந்த மரம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் சாலையோரம் இருந்த கடை, காா் மீது வியாழக்கிழமை காலை லாரி மோதியது. இந்த விபத்தில் சாலையோரம் இருந்த மரம் வேரோடு சாய்ந்தது.

சேலம் மாவட்டம் மேட்டூரை சோ்ந்த குணசேகரன் மகன் மனோகரன்(35). லாரி டிரைவரான இவா், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து உரம் தயாரிக்கப் பயன்டும் மூலப் பொருள்களை ஏற்றிக்கொண்டு செஞ்சி, சிறுகடம்பூா் சிங்கவரம் சாலையில் உள்ள உரக் கிடங்குக்கு வந்து கொண்டிருந்தாா்.

அப்போது, செஞ்சி வட்டாட்சியா் அலுவலகம் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த கடை, காா் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாலையோரம் இருந்த மரமும் வேரோடு சாய்ந்தது. இந்த விபத்தில் அதிருஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த விபத்து குறித்து செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.