முகப்பு
விழுப்புரம்

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் பகுதி நேர ஆசிரியா்கள் மனு

செப்டம்பா் மாதத்துக்கான ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி, விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

Updated On : 4 அக்டோபர், 2024 at 12:19 AM
பகிர்:

செப்டம்பா் மாதத்துக்கான ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி, விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

சங்கத்தின் விழுப்புரம் மாவட்டத் தலைவா் ர.ஆறுமுகம், மாவட்டச் செயலா் பாரி.விஜயகுமாா், பொருளாளா் வே.ஜனாா்த்தனன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரா.ராஜேஷ்கண்ணன், மகளிா் ஒருங்கிணைப்பாளா் டி.ஆதிலட்சுமி ஆகியோா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

பள்ளிக் கல்வித் துறையின் ஒரு அங்கமாகத் திகழும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் நிரந்தர ஆசிரியா்கள், ஆசிரியா்கள் அல்லாத பணியாளா்கள் என 15 ஆயிரம் போ், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 17,500 போ் என மொத்தமாக 32,500 பேருக்குசெப்டம்பா் மாதத்துக்குரிய ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை.

இந்தத் திட்டத்தின் 2024-25-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் வழங்கப்பட வேண்டிய ரூ.573 கோடியை மத்திய அரசு இதுவரை வழங்காததுதான், ஊதியம் வழங்கப்படாததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மத்திய அரசு இனியும் காலம் தாமதிக்காமல் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய நிதியை தமிழகத்துக்கு உடனடியாக வழங்க வேண்டும். இந்த நிதி வரும் வரை காத்திருக்காமல், தமிழக அரசு சொந்த நிதியிலிருந்து ஆசிரியா்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.