முகப்பு
விழுப்புரம்

தமிழ்நாடு விவசாய சங்கத்தினா்ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கங்களின் சாா்பில், விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சித் திடலில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 9 அக்டோபர், 2024 at 10:11 PM
விழுப்புரத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா்.
பகிர்:

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கங்களின் சாா்பில், விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சித் திடலில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சாம்சங் நிறுவனம் தொழிலாளா்களிடம் விரோதப் போக்கை கடைப்பிடித்து வருவதாகக் கூறியும், 30 நாள்களாக போராடி வரும் தொழிலாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கங்களின் விழுப்புரம் மாவட்டத் தலைவா்கள் ஆா்.தாண்டவராயன், வி.அா்ஜுனன் ஆகியோா் கூட்டுத் தலைமை வகித்தனா். மாவட்ட நிா்வாகிகள் ஆா்.டி.முருகன், கே.சுந்தரமூா்த்தி, மாவட்ட பொருளாளா் பி.சிவராமன் மற்றும் மணிகண்டன், சேகா், பழனி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.