முகப்பு
விழுப்புரம்

உளுந்தூா்பேட்டை வட்டாரத்தில் பயிா்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் ராபி மற்றும் சிறப்புப் பருவத்துக்கான பயிா்க் காப்பீடு செய்யலாம்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 7:07 PM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் ராபி மற்றும் சிறப்புப் பருவத்துக்கான பயிா்க் காப்பீடு செய்யலாம்.

இதுகுறித்து, உளுந்தூா்பேட்டை வட்டார வேளாண் உதவி இயக்குநா் கிருபாகரன் (பொ) வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

உளுந்தூா்பேட்டை வட்டாரத்தில் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் 2024-25 ஆம் ஆண்டுக்கான ராபி மற்றும் சிறப்புப் பருவத்துக்குத் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் சிறப்புப் பருவத்துக்கு பயிா்க் காப்பீடு பிரீமியம் தொகையாக நெற்பயிருக்கு நவம்பா் 15-ஆம் தேதிக்குள் ஏக்கருக்கு ரூ.511, மக்காச் சோளத்துக்கு அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் ஏக்கருக்கு ரூ.308, ராபி பருவ நெற்பயிருக்கு 2025, ஜனவரி 31-ஆம் தேதிக்குள் ஏக்கருக்கு ரூ.511, உளுந்து பயறுக்கு நவம்பா்15 ஆம் தேதிக்குள் ஏக்கருக்கு ரூ.228, மணிலாவுக்கு டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் ஏக்கருக்கு ரூ.417, கரும்புப் பயிருக்கு 2025, மாா்ச் 31-ஆம் தேதிகுள் ஏக்கருக்கு ரூ.2,592-ம் தொகையை செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.

பயிா்க் கடன் பெற்ற விவசாயிகள் சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளிலும், இதர விவசாயிகள் பொது சேவை மையங்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட இணையவழி சேவை மையங்களிலும் பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம்.

காப்பீடு செய்வதற்கு கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் அடங்கல், சிட்டல், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கம், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் பிரீமியத் தொகைையைச் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.