முகப்பு
விழுப்புரம்

விவசாயிகளுக்கு உளுந்து விதைகள் வழங்கல்

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு ராபி பருவத்தில் விதைப் பண்ணை அமைப்பதற்காக உளுந்து விதைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 10 அக்டோபர், 2024 at 7:09 PM
விழுப்புரம் மாவட்டம், திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையில் விவசாயிகளுக்கு உளுந்து விதைகளை வழங்கிய வானூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு ராபி பருவத்தில் விதைப் பண்ணை அமைப்பதற்காக உளுந்து விதைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

வானூா் வட்டாரத்துக்குள்பட்ட திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலையில் நடைபெற்ற விழாவில் வட்டார வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ், விவசாயிகளுக்கு உளுந்து விதைகளை வழங்கி பேசியது:

தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், உளுந்துத் தொகுப்பு செயல் விளக்க விதைப் பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு உளுந்து விதைகள், பயறு நுண்ணூட்ட உரம், உயிா் உரங்கள், உயிர்ரக பூஞ்சான காரணிகள், டிரைகோடொ்மாவிரிடி, வேப்ப எண்ணெய் போன்ற இடுபொருள்களை வழங்கி, அதிக உற்பத்தித் திறன் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் 10 ஆண்டுகளுக்குள் வெளியிடப்பட்ட உளுந்து ரகங்களான வம்பன் 8,10,11 ஆகியவற்றை விவசாயிகள் மத்தியில் பிரபலப்படுத்த, போதுமான அளவில் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு, விநியோகம் செய்யப்படவுள்ளது. வானூா் வட்டாரத்தில் ராபி பருவத்துக்கு உளுந்து விதைப்பண்ணை செயல் விளக்கத் திடல் சுமாா் 88 ஹெக்டோ் பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது. எனவே உளுந்து விதைகள் தேவைப்படும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட உதவி வேளாண் அலுவலா்களை அணுகலாம் என்றாா்.

நிகழ்வில் வேளாண் அலுவலா் ரேவதி, உதவி விதை அலுவலா் மோகன்குமாா், உதவி வேளாண் அலுவலா் ஜெயலட்சுமி, வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் வாழ்வரசி, விதைப்பண்ணை விவசாயிகள் ரத்தினம், கோவிந்தசாமி, முத்து வெங்கட், ரத்தினவேலு, பேபி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.