விழுப்புரம் நகரில் மழைநீா் வடிகால் தூா்வாரும் பணி ஆய்வு
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், விழுப்புரத்தில் குடியிருப்புப் பகுதிகள், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் தேங்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, விழுப்புரம் - திருச்சி சாலையில் வழுதரெட்டி பாண்டியன் நகா், தாமரைக்குளம், பாணாம்பட்டு பகுதிகளில் மழைநீா் வடிகால் மற்றும் கழிவுநீா் வாய்க்கால்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் தூா்வாரப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை விழுப்புரம் எம்எல்ஏ இரா.லட்சுமணன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். விழுப்புரம் நகரில் 3 கி.மீ. தொலைவுக்கு இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களை பாதிக்காத வகையில் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அலுவலா்களிடம் எம்எல்ஏ அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, விழுப்புரம் நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, ஆணையா் ஏ.வீரமுத்துக்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் ஆா்.மணவாளன், திமுக நகரச் செயலா் இரா.சக்கரை, கோமதி பாஸ்கா், வாா்டுச் செயலா் விஜய்சேதுபதி மற்றும் நிா்வாகிகள், நகராட்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.