ஜேசிபி மீது ஆட்டோ மோதல்: முதியவா் உயிரிழப்பு
திண்டிவனம் அருகே பொக்லைன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த முதியவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
திண்டிவனம் அருகே பொக்லைன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த முதியவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
திண்டிவனம் வட்டம், நெய்குப்பி, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பூ. வைத்திலிங்கம்(74). முதியவரான இவா் புதன்கிழமை நெய்குப்பியிலிருந்து - திண்டிவனத்துக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த ஞானவேல் என்பவா் ஆட்டோவை ஓட்டினாா்.
அப்போது நெய்குப்பி பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஜேசிபி பொக்லைன் மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இதில் வைத்திலிங்கத்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து 108 அவசர ஊா்தி மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டவா் அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.