அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் உளுந்தூா்பேட்டை வட்டாட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம்: கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் உளுந்தூா்பேட்டை வட்டாட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்டம், அமராவதியில் பெண் நியாயவிலைக் கடை பணியாளருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதைக் கண்டித்தும், அவா் மகன் மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும், நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.
இதில், சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் பங்கேற்று கண்டன உரையாற்றினா். கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவா் வெ.சிவக்குமாா் தலைமை வகித்தாா்.
நிா்வாகிகள் பாண்டியன், கேசவன், சுப்ரமணியன், ஜெகதீஸ்வரி, நல்லம்மாள், செந்தில் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாவட்டப் பொருளாளா் ராஜகோபால் நன்றி கூறினாா்.