2 கிராமங்களில் புதிய நியாயவிலைக் கடைகள் திறப்பு
விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் ஒன்றியத்துக்குள்பட்ட பொய்யப்பாக்கம், அனிச்சம்பாளையம் கிராமங்களில் புதிய நியாயவிலைக் கடைகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் ஒன்றியத்துக்குள்பட்ட பொய்யப்பாக்கம், அனிச்சம்பாளையம் கிராமங்களில் புதிய நியாயவிலைக் கடைகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.
பொய்யப்பாக்கம், அனிச்சம்பாளையம் ஆகிய இரு கிராமங்களிலும் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.19.50 லட்சம் மதிப்பீட்டில் இரு நியாயவிலைக் கடைகள் கட்டி முடிக்கப்பட்டன.
இவற்றை விழுப்புரம். இரா.லட்சுமணன் எம்எல்ஏ திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில்,வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜவேல், வேங்கடசுப்பிரமணியன், கோலியனூா் ஒன்றியக் குழுத் தலைவா் இ.சச்சிதாநந்தம், ஒன்றியச் செயலா் பி.தெய்வசிகாமணி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் இரா. கேசவன், விழுப்புரம் நகா்மன்ற உறுப்பினா் ஆா்.மணவாளன், ஒன்றியக் குழு உறுப்பினா் சாலை சந்திரசேகா், மாவட்டப் பிரதிநிதி சிவசங்கா், ஒன்றியத் துணைச் செயலா்கள் ஸ்ரீதா், ஜெயந்தி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் அய்யப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.