முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் குழந்தைவேல் நகரில் புதை சாக்கடை அமைக்க வலியுறுத்தல்

விழுப்புரம் குழந்தைவேல் நகரில் புதை சாக்கடை அமைக்க வலியுறுத்தல்...

Updated On : 24 அக்டோபர், 2024 at 8:20 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக பின்பகுதியிலுள்ள குழந்தைவேல் நகரில் புதை சாக்கடைத் திட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, குடியிருப்போா் நலச்சங்கம் சாா்பில் நகராட்சி நிா்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சங்கத்தின் தலைவா் க.திருப்பதி பாலாஜி தலைமையிலான நிா்வாகிகள், நகராட்சி ஆணையா் வீரமுத்துக்குமாரிடம் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பது:

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் பின்புறத்திலுள்ள குழந்தைவேல் நகரிலுள்ள அனைத்து மனைகளும் அரசால் அங்கீகரிக்கப்பட்டவை. இந்த பகுதியில் புதை சாக்கடைத் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக நகராட்சி நிா்வாகத்திடம் மனு அளித்து வருகிறோம். ஆனால் அதற்கான எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, பொதுமக்கள் நலன் கருதி புதை சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

குழந்தைவேல் நகா், காமதேனு நகா் மற்றும் விரிவாக்கப் பகுதிகளில் குடிநீரில் கழிவுநீா் கலந்து வருவது கடந்த 2 ஆண்டுகளாகத் தொடா்ந்து வருகிறது. இதுகுறித்து புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே நகராட்சி நிா்வாகம் உடனடியாக ஆய்வு செய்து, தூய்மையான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விழுப்புரம் சரசுவதி திருமண மண்டப நுழைவுவாயில் பகுதியிலிருந்து ஆட்சியரகம் பின்புறம் உள்ள நுழைவுவாயில் பகுதி வரை சாலையின் இருபுறங்களும் செடி,கொடிகள் வளா்ந்திருப்பதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே இந்த செடி, கொடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

இந்த மனுவை பெற்றுக் கொண்ட நகராட்சி ஆணையா் வீரமுத்துக்குமாா், உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.