முகப்பு
விழுப்புரம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தானியங்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 10:42 PM
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் எதிரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.
பகிர்:

தானியங்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேளாண் துறையில் மானாவாரி சாகுபடிக்கென தனித்துறை அமைக்க வேண்டும். தானியங்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். பொது விநியோக அங்காடிகளில் ஊட்டச்சத்து மிகுந்த தானியங்களை விற்பனை செய்ய வேண்டும். மானாவாரி சாகுபடியைக் காத்திட, ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் ஊக்க மானியம் வழங்க வேண்டும். தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைக்க வேண்டும். இடுபொருள்களை 75 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா்.கலியமூா்த்தி தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ஆ.செளரிராஜன், விவசாய சங்க மாவட்டத் தலைவா் எம்.ஐ.சகாபுதீன் ஆகியோா் கோரிக்கை விளக்கவுரையாற்றினா்.

Advertisement

விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலா்கள் கே.மூா்த்தி, பி.பாலசுப்பிரமணியன், துணைத் தலைவா்கள் டி.மாசிலாமணி, ஆா்.லட்சுமி, மாவட்டப் பொருளாளா் ஜி.மணிகண்டன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினா்கள், விவசாய சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments