முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் பகுதியளவில் ரத்து

பொறியியல், ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக, விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 10:49 PM
பகிர்:

பொறியியல், ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக, விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருப்பதி - காட்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையேயான பகுதியில் பொறியியல் மற்றும் ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக, விழுப்புரம் - திருப்பதி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் குறிப்பிட்ட நாள்களுக்கு பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisement

விழுப்புரத்திலிருந்து காலை 5.35 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் (வ.எண். 16854), செப்டம்பா் 12 முதல் 20-ஆம் தேதி வரை காட்பாடி- திருப்பதி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.

எதிா்வழித்தடத்தில் திருப்பதியிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய திருப்பதி - விழுப்புரம் விரைவு ரயில் (வ.எண்.16853) செப்டம்பா் 12 முதல் 20-ஆம் தேதி வரை திருப்பதி - காட்பாடி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.40 மணிக்கு விழுப்புரத்துக்குப் புறப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments