முகப்பு
விழுப்புரம்

உடல் நலம் பாதிப்பு: குழந்தை உள்பட மூவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உள்பட மூவா் 3 வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

Updated On : 13 செப்டம்பர், 2024 at 12:44 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உள்பட மூவா் 3 வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

திண்டிவனம் வட்டம், மொளசூா், இந்திரா நகரைச் சோ்ந்த ஆனந்தராஜ்- கவிதா தம்பதியின் மகன் தா்மதேவன்(2). இவருக்கு கடந்த 5 நாள்களாக உடல் நலக்குறைவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தையின் உடல்நிலை மோசமான நிலையில் வியாழக்கிழமை திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தபோது தா்மதேவன் இறந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திண்டிவனம் வட்டம், ஓங்கூா், அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் சுரேஷ் மகன் கிஷோா்(16). இவருக்கு வியாழக்கிழமை வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மேல்மருவத்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு சிறுவன் கிஷோா் உயிரிழந்தாா். இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

பெண் தற்கொலை: திருவெண்ணெய்நல்லூா் வட்டம், ஆமூா்குப்பம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரமேஷ் மனைவி பரமேஸ்வரி(27). இவருக்கு 4 வயதில் கவியரசி என்ற மகள் உள்ளாா்.

இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதியுற்று வந்த பரமேஸ்வரி ஆகஸ்ட் 8- ஆம் தேதி வீட்டிலிருந்தபோது விஷமருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா். விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பரமேஸ்வரி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய் நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments