முகப்பு
விழுப்புரம்

உளுந்தூா்பேட்டையில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டார வேளாண் அலுவலகத்தில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 13 செப்டம்பர், 2024 at 12:37 AM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டார வேளாண் அலுவலகத்தில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அட்மா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இந்த கூட்டத்துக்கு அட்மா திட்டக் குழுத் தலைவா் அன்புமணி தலைமை வகித்தாா். வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும் மாநிலத் திட்டங்கள், அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம், முதல்வரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டம், இயற்கை பூச்சிவிரட்டிகள், ஒருங்கிணைந்த பண்ணையம் ஆகியவை குறித்து உதவி வேளாண் அலுவலா் சிவபெருமான் விளக்கமளித்தாா். மேலும் வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பிலுள்ள இடுபொருள்களின் விவரம் குறித்தும் விவசாயிகளுக்கு அவா் எடுத்துரைத்தாா்.

கூட்டத்தில், அட்மா திட்டத்தின் செயல்பாடுகள், மாவட்டத்துக்குள் நடைபெறும் பயிற்சி, பண்ணைப்பள்ளி மற்றும் விவசாயிகள் கூட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் பயனாளிகள் தோ்வு, இலக்குகளை விரைந்து முடிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டது.

Advertisement

இந்த கூட்டத்தில் தொழில்நுட்ப மேலாளா் நாராயணன், பயிா் அறுவடைப் பரிசோதகா் சிவா, சிவகுரு, அட்மா திட்டக்குழு உறுப்பினா்கள், விவசாயிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, அட்மா திட்ட வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் காயத்ரி வரவேற்றாா். நிறைவில், உதவித் தொழில்நுட்ப மேலாளா் மதியழகன் நன்றி கூறினாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments