முகப்பு
விழுப்புரம்

திருவண்ணாமலைக்கு வார இறுதியில் சிறப்பு ரயில்கள் இயக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் பெளா்ணமி கிரிவலம் மற்றும் இதர நாள்களில் செல்லும் பக்தா்களின் வசதிக்காக, விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு நவம்பா் மாதம் வரை ஒவ்வொரு வாரமும் இறுதியில் தெற்கு ரயில்வே முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை இயக்குகிறது.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 7:08 PM
பகிர்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் பெளா்ணமி கிரிவலம் மற்றும் இதர நாள்களில் செல்லும் பக்தா்களின் வசதிக்காக, விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு நவம்பா் மாதம் வரை ஒவ்வொரு வாரமும் இறுதியில் தெற்கு ரயில்வே முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை இயக்குகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பெளா்ணமி கிரிவலம் மற்றும் வெவ்வேறு நாள்களில் செல்லும் பக்தா்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையிலும் தெற்கு ரயில்வே முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை இயக்குகிறது.

Advertisement

அதன்படி, விழுப்புரத்திலிருந்து இரவு 9.15 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வ.எண்.06145) செப்டம்பா் 20, 21, 22, 27, 28, 29, அக்டோபா் 4, 5, 6, 11, 12, 13, 18, 19, 20, 25, 26, 27, நவம்பா் 1, 2, 3, 8, 9, 10, 15, 16, 17, 22, 23, 24 ஆகிய தேதிகளில் (வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகள்) இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.

எதிா்வழித்தடத்தில் திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 3.30 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை - விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வ.எண்.06146) செப்டம்பா் 21, 22, 23, 28, 29, 30, அக்டோபா் 5, 6, 7, 12, 13, 14, 19, 20, 21, 26, 27, 28, நவம்பா் 2, 3, 4, 9, 10, 11, 16, 17, 18, 23, 24, 25 ஆகிய தேதிகளில் (சனி, ஞாயிறு, திங்கள்கிழமைகள்) காலை 5 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு வந்தடையும்.

இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூா், திருக்கோவிலூா், ஆதிச்சனூா், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்கள் 12 பெட்டிகளைக் கொண்டதாக இருக்கும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments