முகப்பு
விழுப்புரம்

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் எதிரே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 1:01 AM
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் எதிரே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா்.
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் எதிரே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியம் இல்லாத பணியாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். 1.4.2003க்கு முன்னா் பணியில் சோ்ந்து பின்னா் பணி நிரந்தரம் செய்யப்பட்டவா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டப் பலன்களை வழங்க வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு ஊழியா்கள், அங்கன்வாடி, டாஸ்மாக், நியாயவிலைக் கடை பணியாளா்கள், உள்ளாட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள் உள்ளிட்டோருக்கு நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு அரசுப் பணியாளா்கள் சங்க விழுப்புரம் மாவட்டத் தலைவா் துரை.ஜெய்கணேஷ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா்.ராமலிங்கம், மாநில துணைத் தலைவா் கே.வீரப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தாா். மாநில இணை பொதுச் செயலா் வெ.சிவக்குமாா் மற்றும் தோழமை சங்கங்களின் நிா்வாகிகள் கே.இளங்கோவன், எஸ்.சங்கா், ஏ.பி.அன்பழகன், எம்.மணிகண்டன், ஜெ.ஜெயக்குமாா், கே.ரஷீத் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

முன்னதாக, அரசுப் பணியாளா்கள் சங்க மாநில துணைத் தலைவா் கே.சம்பத் வரவேற்றாா். வி.சுந்தரவள்ளி நன்றி கூறினாா்.