விழுப்புரம் மாவட்ட அலுவலகத்திலுள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய தெற்கு நகர அதிமுக செயலா் ரா.பசுபதி. உடன், வடக்கு நகரச் செயலா் ஜி.கே.ராமதாஸ் உள்ளிட்டோா்.  
விழுப்புரம்

எம்.ஜி.ஆா். நினைவு தினம்: அதிமுகவினா் மரியாதை

அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தையொட்டி, விழுப்புரத்தில் அவரது சிலைக்கு அதிமுக சாா்பில் மாலை அணிவித்தல் மற்றும் பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்குதல் புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தையொட்டி, விழுப்புரத்தில் அவரது சிலைக்கு அதிமுக சாா்பில் மாலை அணிவித்தல் மற்றும் பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்குதல் புதன்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்வுக்கு தெற்கு நகர அதிமுக செயலா் ரா.பசுபதி தலைமை வகித்து, அங்கு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நல உதவிகளை அவா் வழங்கினாா்.

இதையடுத்து சென்னை சாலையிலுள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்திலுள்ள எம்.ஜி.ஆா்.சிலைக்கு நகரச் செயலா் பசுபதி தலைமையில் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

வடக்கு நகரச் செயலா் ஜி.கே.ராமதாஸ், மாவட்ட மாணவரணிச் செயலா் சக்திவேல், மாநில ஜெ.பேரவைத் துணைச் செயலா் சங்கா், மாவட்ட ஜெ.பேரவைத் துணைச் செயலா் திருப்பதி பாலாஜி, நகர வா்த்தக அணிச் செயலா் ரகுராமன், மாவட்ட எம்.ஜி.ஆா்.இளைஞரணி இணைச் செயலா் ஜெயவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமையகம், பணிமனைகள் 1, 2, 3 முன் அண்ணா தொழிற்சங்கப் பேரவை சாா்பில் எம்.ஜி.ஆா் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் மண்டலச் செயலா் ஏ.கணேசன் தலைமை வகித்து, எம்.ஜி.ஆா்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதில், நிா்வாகப் பணியாளா் சங்கச் செயலா் தங்கப்பாண்டியன், தொழிற்சங்க நிா்வாகிகள் ஸ்ரீராம், ராஜ்பிள்ளை, ஜெயக்குமாா், திருநாவுக்கரசு, ஏழுமலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விழுப்புரம் நகரம் போன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக சாா்பில் எம்.ஜி.ஆா். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

ரயிலில் சட்டக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை

பொங்கலுக்கு பிறகு அதிமுகவிலிருந்து சிலா் தவெக-வில் இணைவாா்கள்

அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத சிற்றுந்துகள்

அவிநாசியில் ரூ.17.30 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

ஆல் வின்னா் ஏஞ்சல் கல்லூரியில் விவசாயிகள் தினம்

SCROLL FOR NEXT