இணையவழி லாட்டரி விற்றவா் கைது
திண்டிவனத்தில் இணையவழி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
திண்டிவனம் காவல் உதவி ஆய்வாளா் செந்தில்முருகன் தலைமையிலான போலீஸாா், செஞ்சி சாலை உழவா் சந்தை பகுதியில் வியாழக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்குரிய முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தபோது, அவா் இணையவழி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
தொடா்ந்து நடத்திய விசாரணையில் அவா் திண்டிவனம் வேப்பஞ்சாலை தெருவைச் சோ்ந்த பத்மநாபன் மகன் ஆனந்தன் (50) எனத் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து 2 கைப்பேசிகள் உள்ளிட்டவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.