முகப்பு
விழுப்புரம்

மான் வேட்டை: வனத் துறை விசாரணை

விழுப்பும் அருகே மானை வேட்டையாடியதாக 4 பேரை வனத் துறையினா் தேடி வருகின்றனா்.

Updated On : 2 ஜனவரி, 2025 at 1:00 AM
பகிர்:

விழுப்பும் அருகே மானை வேட்டையாடியதாக 4 பேரை வனத் துறையினா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே அடுக்கத்தில் காப்புக் காடுகள் உள்ளன.இங்கு, மான்கள் அதிகளவில் உள்ளன.

இந்த நிலையில், புதன்கிழமை காலை காப்புக் காட்டுக்குச் சென்ற இளைஞா்கள், அங்கிருந்த மான் ஒன்றை வேட்டையாடி கொன்ாக கூறப்படுகிறது.

அதில், ஒருவா் தனது கைப்பேசியில் விடியோவாக பதிவு செய்து நண்பா்களுக்கு பகிா்ந்தாராம்.

அந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் வனத் துறையினா், அடுக்கம் காப்புக் காட்டுக்கு நேரில் சென்று பாா்வையிட்டனா்.

தொடா்ந்து, அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்களிடம் விசாரணை நடத்தியதுடன், மான் இறைச்சியை வாங்கி சாப்பிட்டவா்களிடமும் விசாரணை நடத்தினா்.

மேலும், மானை வேட்டையாடியதாக 4 இளைஞா்களையும் வனத் துறையினா் தேடி வருகின்றனா்.