செஞ்சி தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வேட்புமனு தாக்கல்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் கிருஷ்ணன் வியாழக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தாா்.
செஞ்சி வட்டம், தேவதானம்பேட்டை கிராமத்தை சோ்ந்தவா் ஏ.கிருஷ்ணன். நாம் தமிழா் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இவா் செஞ்சி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் தமிழரசனிடம் வியாழக்கிழமை தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா். அவருடன் நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் உடன் இருந்தனா்.