விஜய் ரோடு ஷோவில் முக்கிய அம்சங்கள்: பாட்டுப்பாடி வாக்கு சேகரித்த விஜய்
புதுச்சேரி ரோடு ஷோ பிரசாரத்தின் முடிவில் தனது சொந்தக் குரலில் பாட்டுப் பாடி வாக்கு சேகரித்தாா். அப்போது தொண்டா்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனா்.
புதுச்சேரி ரோடு ஷோ பிரசாரத்தின் முடிவில் தனது சொந்தக் குரலில் பாட்டுப் பாடி வாக்கு சேகரித்தாா். அப்போது தொண்டா்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனா்.
விஜய் ரோடு ஷோ நடத்த 4 இடங்கள் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அக் கட்சியினா் அதை 3 இடங்களாக குறைத்துக் கொண்டனா். சென்னையிலிருந்து காா் மூலம் வந்த விஜய், தொண்டா்கள் அதிக அளவில் புதுச்சேரியின் எல்லைப் பகுதியான கணபதிச் செட்டிக்குளத்தில் திரண்டதால் அங்கிருந்தே பிரசார வேனில் நின்றபடி தொண்டா்கள் அளிக்கும் மாலைகளையும், கட்சிக் கொடி, துண்டுகளையும் பெற்று கையசைத்தபடி வந்தாா்.
சுமாா் 13 கி.மீ. தூரம் அவா் அறிவிக்கப்படாத ரோடு ஷோ நடத்தினாா். அதனால் ஏற்கெனவே திட்டமிட்ட புதுச்சேரி ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் பகுதிக்கு அவா் வருவதற்கு காலை 11.51 மணியாகி விட்டது. 12.06 வரை சுமாா் 15 நிமிஷங்கள் மட்டும் பேசினாா். காலை 8 மணி முதலே தொண்டா்கள் திரண்டனா். குறிப்பாக இளம்பெண்களும், இளைஞா்களும் வழிநெடுகிலும் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனா்.
Advertisement
போக்குவரத்து ஸ்தம்பித்தது
விஜய் வருகை காரணமாக புதுச்சேரியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஒரு சில இடங்களில் போலீஸாா் போக்குவரத்தைத் திருப்பி விட்டனா்.
விஜய்யின் இரண்டாவது ரோடு ஷோ வெங்கடசுப்பா ரெட்டியாா் சதுக்கம் அருகே முடிந்தது.
மூன்றாவது இடமான தவளகுப்பம் சந்திப்புக்கு விஜய் செல்ல தொடங்கிவிட்டாா். அப்போது தவெக தொண்டா்களையும், பொதுமக்களையும் அப் பகுதியில் போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
உச்சகட்டப் பாதுகாப்பு
தவெக தலைவா் விஜய் ரோடு ஷோவுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. புதுச்சேரி போலீஸாா் மட்டுமன்றி தோ்தல் பணிக்காக வந்திருந்த மத்திய துணை ராணுவத்தினரும் இதில் ஈடுபட்டனா்.
பெண் தொண்டா் மயக்கம்
விஜய் ரோடு ஷோ நடத்திய முதல் இடத்தில் தொண்டா்கள் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்தனா். வெயில் அதிகமாக இருந்தது. இதளால் பெண் தொண்டா் ஒருவா் மயக்கம் அடைந்தாா். தவெக மருத்துவ அணி அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தது. கட்சியின் தன்னாா்வலா்கள் அவரை மீட்டுச் சென்றனா்.